top of page
Temple Candles

சப்த கைலாய க்ஷேத்திரம்

 

அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் வழிபட்ட சப்த கைலாய க்ஷேத்திரங்கள்

 

கைலாயங்கிரியில் இறைவிளயாட்டாக சிவபெருமான் தவமிருக்கையில் உமையவள் தன இரு கைகளினால் சூரியன் சந்திரனையே இரு கண்களாக கொண்ட சிவனின் கண்களை மூட உலகமே சூரிய சந்திரன் இயக்கமின்றி இருளாகி நிசப்தமானது. இதனால் கோபமுற்ற எம்பெருமான் உமையவளை பூலோகம் செல்லுமாறு சபித்தார். உமையவள் இறைவனிடம் விமோசனம் கேட்க, பூலோகத்தில் பஞ்ச பூத க்ஷேத்திரங்களான ஆகாயம்- சிதம்பரம் , காற்று- திருக்காளத்தி , நீர் - திருவானைக்கா , அக்னி- திருவண்ணாமலை இவைகளை காட்டிலும் மேலான மண் - (ப்ரித்வி) க்ஷேத்திரமான காஞ்சிபுரத்திற்கு சென்று இரு நாழி நெல் கொண்டு 32 அறங்களை செய்து தவம் புரிந்து வருமாறும் தாம் திருவண்ணாமலை அக்னி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்ற திருநாமத்தில் எழுந்தருளி உமையவளுக்கு தன உடம்பில் இடது பாகம் தந்தருளி ஆட்கொள்ளுவதாகவும் வரம் அருளினார்.

 

அவ்வாறே உமையவள் அன்னை காமாக்ஷி என்ற திருநாமத்துடன் காஞ்சிபுரத்தில் அவதரித்து அறங்களை   செய்து மாமரத்தின் ரூபத்தில் தோன்றிய ஈசனை அம்மாமரத்தின் அடியில் அமர்ந்து கடும் தவம் புரிந்தார். ஸ்ரீ காஞ்சி - ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் இன்றும் அம்மாமரம் உள்ளது. இம்மரத்தின் கிளைகள் சூல  வடிவில் உள்ளதோடு ஒவ்வொரு கிளையின் கனியும் வெவ்வேறு சுவையை தருகிறது என்பது அதிசயமாகும். அம்பாளின் தவத்தை  மெச்சிய இறைவன் முன்பு கூறியவாறே அம்பாளை அக்னி க்ஷேத்திரத்திற்கு வருமாறும் தம் உடம்பில் இடப்பக்கம் தந்து ஆட்கொள்ளுவதாகவும் அருளினார். அவ்வாறே அம்பாள் ஸ்ரீ காமாக்ஷி காஞ்சியிலிருந்து புறப்பட்டு நினைத்தாலே முக்தி தரும் மோக்ஷபூரி திருவண்ணாமலை நோக்கி வரும் வழியில் ஈசனை பூஜிக்க அனுஷ்டான காலசந்தி  நேரம் வரவே , தற்போதுள்ள வாழைப்பந்தல் கிராமத்திற்கு மேற்கே கதலி  ( வாழை) வனத்தில் - அது கோடை காலம் என்பதாலும் தன உடம்பின் வெப்பத்தை தணிக்கவும் , மகன் குகன் வாழைப்பந்தல் அமைத்து தர , சிவனை பூஜிக்க தன மைந்தர்களை அழைத்து தூய நீர் கொண்டு வருமாறு பணித்தார்

அவ்வாறே ஸ்ரீ முருகப்பெருமான் தன அன்னையின் பூஜைக்கு புனித நீர் வரவழைக்க தன வீர வேலை ஜவ்வாது மலை தொடரில் செங்கண்மார்கள் என்ற மலை வாழ் மக்கள் வாழும் செங்கண் மலை நோக்கி வீச , அவ்வேல் தென் கைலாய பர்வத  மலையின் ஏழு குன்றுகளை தாக்கி துளைத்துக்கொண்டு தற்போதுள்ள மேல்குப்பம் கிராமத்தினருகில்  உள்ள மலையில் குத்தி சொருகி புனித நீர் தோன்றி விட , அதுவே செங்கண் மாமலையில் நிருதி மூலையில் இருந்து கிழக்கு , வடகிழக்கு நோக்கி உத்திரவாஹினி யாகி ஓடி வந்து , அம்பாள் காமாட்சியின் அனுஷ்டான பூஜைக்கு உதவியது. அதுவே சேயாறு + குழந்தை பாலமுருகனால் உருவாக்கப்பட்ட ஆறு என்றும் செய் என்றால் தெலுங்கில் கை ( ஸ்ரீ முருகப்பெருமான் கையால் உருவாக்கப்பட்டதால்  ) செய்யாறு என்றும் பெயர் பெற்றது.

ஸ்ரீ முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட சேயாறு நீரும் ஸ்ரீ விநாயகரால் ஜவ்வாது மலைத்தொடரிலிருந்து உருவாக்கப்பட்ட கமண்டல நதி நீரும் , அன்னையின் பூஜைக்கு சேர்ந்து வர காலதாமதமாகவே அன்னை மணலில் சிவலிங்கம் செய்து வாழைப்பந்தலில் அனுஷ்டான நேரத்தில் சிவனை பூஜிக்க தான் அமர்ந்த இடத்திலிலேயே தன கைபிரம்பால் பூமியைத்தட்டி பூஜைக்கு புனித நீர் வர வைத்தார். இந்நீர் கிழக்கு நோக்கி சிறு நதியாகி ஓடி பின்னர் செய்யாறு, கமண்டல நதிகளுடன் இனைந்து முக்கூட்டு நதியாக வடகிழக்கு நோக்கி பிரவாகனமானது. அம்மன் அமர்ந்து சிவனை பூஜித்த இடத்தில 5 அடி உயர சிவலிங்கம் உள்ளது. இவரை முக்கூட்டுநதி சிவன் , ஸ்ரீ மணல்கண்டேஸ்வரர் என்ற திருநாமங்களில் பக்தர்கள் வழி படுகின்றனர். 

ஸ்ரீ முருகவேல் தென்கைலாய பர்வதமலையின் ஏழு குன்றுகளை தாக்கி துளைத்தபோது, ஸ்ரீ பிரம்மனுடைய அருளால் ஸ்ரீ முருப்பெருமானின் வீரவேலால் முக்தி கிடைக்கும் என அருளப்பட்டதால் , அவ்வேல் அக்குன்றுகளில் தவம் புரிந்த ஏழு அந்தணர்களின் சிரத்தை கொய்து அவர்களுக்கு மோட்சத்தை தந்தது. ஏழு பிராமணர்களை கொன்ற பாவத்தால் வந்த பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க அன்னை ஸ்ரீ காமாட்சியின் கட்டளைப்படி ஸ்ரீ முருகப்பெருமான் ஏழு சிவக்கரைகண்டங்களை சேயாற்றின் வடகரையில் எழுப்பி பூஜிக்கிறார். இது கொலை பாதகம்  அல்ல, ஸ்ரீ பிரம்மனால் அருளப்பட்டு ஸ்ரீ முருக வேலால் மோட்ச பதவி தந்தருளிய திருவிளையாடல்  ஆகும். ஆயினும் கொலைப்பாதகம் பாவமே என்பதால் , அன்னையின் கட்டளைப்படி தான் இக்கொலை பாதகம் நடந்தது என்பதால் கொலை பாதகம் செய்தவரை விட அதற்கு காரணமான அம்பாளுக்கும் அப்பாவத்தில்  பங்கு என்பதால்  அம்பாளின் புனிதப்பயணம் தட்டுப்படுகிறது.  எனவே அன்னை ஸ்ரீ காமாட்சி சேயாற்றின் தென் கரையில் சப்த கைலாய சிவப்பதிகள் முறையே மண்டகொளத்தூர், கரை ப்பூண்டி , தென்பள்ளிப்பட்டு, பழங்கோவில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் வாசுதேவம்பட்டு ஆகிய புனித இடங்களில் பூஜித்து தன அறங்களை செய்து திருவண்ணாமலை நோக்கி புனித பயணம் தொடர்கிறார். . பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஸ்ரீ பாலமுருகனும் தன அன்னையுடன் இணைந்து ஐயனை பூஜித்து வந்தார்.

சேயாற்றின் வடகரையிலுள்ள சப்த கரை கண்டங்களில் உள்ள ஏழு சிவன் கோவில்களிலும் அருவுருவ லிங்க ரூபத்தில் வீற்றுள்ள மூலவர் ஸ்ரீ கரைகண்டேஸ்வரர் என்றும் அம்பாள் வரத கடுக  ( இடுப்பில் கை  வைத்த) ஹஸ்தங்களுடன் வேக நடையில் அருள்மிகு பெரியநாயகி என்றும் ஒரே பெயரிலேயே அழைக்கப்படுவதை ஏற்கெனவே பார்த்தோம். இது அவற்றின் பழம்பெருமைக்கு சிறந்த சான்று.

அதே சமயம் சேயாற்றின் தென்கரையிலுள்ள ஏழு சிவன் கோவில்களும் சப்த கைலாய க்ஷேத்திரங்கள்  என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த ஏழு க்ஷேத்திரங்களிலும் அம்பாளும் உடனுறை மூலவர் சிவனும் வெவ்வேறு தனித்திருநாமங்கள் பூண்டிருப்பதும் ஒரு தனி சிறப்பாகும். வாசுதேவம்பட்டில் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ பக்தவத்சலேஸ்வரர் என்றும் , தாமரைப்பாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் என்றும் நார்த்தாம்பூண்டியில் அருள்மிகு பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் என்றும், பழங்கோவிலில் அருள்மிகு பாலாம்பிகை சமேத ஸ்ரீ பாலக்ரிதீஸ்வரர் என்றும், தென்பள்ளிப்பட்டில் அருள்மிகு கனகாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர்  என்றும், கரைப்பூண்டியில் அருள்மிகு பாலசுந்தரி சமேத ஸ்ரீகண்டேஸ்வரர்  என்றும், மண்டகொளத்தூரில் அருள்மிகு தர்மசம்வர்தினி சமேத ஸ்ரீ தர்மநாதேஸ்வரர் என்றும் சிறப்பு திருநாமங்கள் பூண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

 

மோண்டாகொளத்தூர்

MK Aerial.png

தென்பள்ளிப்பட்டு

TPattu Aerial.png

நார்தம்பூண்டி

NP Aerial.png

வாசுதேவம்பட்டு

VDP Aerial 2.png

கரைப்பூண்டி

KP Aerial.png

பழங்கோவில்

PKoil Aerial.png

தாமரைப்பாக்கம்

TP A View 2.png
bottom of page