Mission
எங்கள் முயற்சி
தற்போது மோசமான நிலையில் உள்ள பாரம்பரிய கோவில்களை பாதுகாக்க உதவுவதே இந்த பணியின் குறிக்கோள். இத்தகைய நடவடிக்கையானது கோவிலில் அதிகமான பங்கேற்பின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் . தேவையான நிதியையு ம் கூட இதே வகையில் சேகரித்து நிதியில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதே எங்கள் நோக்கமாகும்.
முதல் கட்டத்தில், ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜைகளை உறுதி செய்வதற்கும், அதற்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கும் ஒரு அர்ப்பணிப்புள்ள அர்ச்சகரை கோவிலில் சேர்த்துக்கொள்வதிலும் திட்டத்தில் கவனம் செலுத்துவோம். இது தவிர நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் விநியோகம் மாலை பூஜைக்குப் பிறகு குறைந்தது 20 நபர்களுக்காவது ஒரு முறை வழங்கும்படி பார்த்துக்கொள்வோம் . வழக்கமான பழுது மற்றும் சிறிய பாகங்கள் வழங்குதல் ஆகியவையும் இதில் உள்ளடக்கப்படும். கோவில்களில் பொது மக்கள் பங்கேற்ப்பு ஊக்குவிக்கும் அனைத்து முயற்சிகளும் ஆதரிக்கப்படும்; சமூகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பாரம்பரிய இசை மற்றும் நடனத்திற்கான வகுப்புகளுக்கு நிதியளிப்பது இதில் உள்ளடக்கப்படும் ..
இரண்டாம் கட்டமாக, சேதமடைந்துள்ள கோவில்களின் கட்டமைப்பு மற்றும் கட்டடக்கலையை மீட்டெடுக்க, அரசுடன் இணைந்து, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.