top of page

சேயாறு

ஸ்தல புராணம்

(ஆலய மஹிமை)

 

சேயாற்றின் மஹிமை

 

சான்றோருடை த்த தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், போளூர் , ஆரணி, செய்யார் வட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் உள்ள நதிகளிலேயே அதிக தூரம் வடக்கு, வடகிழக்கு நோக்கி பாயும் உத்தரவாஹினி பாஹு நதி என்ற சேயாறு வடநாட்டில் கங்கை போல் புனித சக்தியுடன் உள்ளது. அன்னை ஸ்ரீ உமை பார்வதி சேயாற்றில் புனித நீராடியதால் கங்கை நதிக்கு சமமானது என்கிறார் சைவ எல்லப்ப நாவலர்.

 

சேயாறு தோற்றம்

செந்தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தின் தலைநகரமான காஞ்சி  மாநகரில் அவதரித்த அருள்மிகு காமாக்ஷி அம்மன் திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையாரின் இடது  பாகம்   வேண்டி தவம் புரிந்து கம்பை ஆற்றைவிட்டு காஞ்சிபுரத்தையும் கடந்து திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டு வரும் வழியில் , பகல் சந்தி கால  பூஜை நேரம் வந்து விட்டதால் , ஓரிடத்தில் சுப்பிரமணியர் தன அன்னை பூஜிப்பதற்காக ஒரு பச்சை பந்தல் அமைத்து தந்தார். அந்த இடத்தில தற்சமயம் வாழைப்பந்தல் என்ற கிராமத்தில் அன்னை காமாக்ஷி மண் லிங்கம் அமைத்து சிவனை வழி பட முற்பட்டாள்.

அது கோடை காலம் என்பதாலும் தன்  உடல் வெப்பம் போக்கவும் திரி புவன மாதேவி நல்லூருக்கு ( வாழைப்பந்தல் கிராமம்) மேற்கே தற்சமயம் சேயாறு, கமண்டல நாக நதி சங்கமிக்கும் இடத்தின் அருகில் முருகன் அமைத்த வாழைப்  பந்தலில் ஈசனை பூஜிக்க அமர்ந்தார். பூஜைக்கு புனித நீர் கொண்டு வரும்படி தன மைந்தர்களை பணித்தார்.

அன்னையின் பூஜைக்கு தூய நீர் வேண்டி முருகப்பெருமான் தற்சமய கடலாடி வரை வந்து திருவண்ணாமலை வாழ் ஸ்ரீ அண்ணாமலையாரையும் அம்பாள் அருள் மிகு காமாக்ஷியையும் இணைத்து, நினைத்து தற்சமய அருள் மிகு காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீ வன்னீஸ்வரர் ஆலயப்பகுதியில் பூஜித்து தன் வீர வேலை ஜவ்வாது மலைத்தொடரில் உள்ள செங்கண் மாமலை ( செங்கம்) நோக்கி வீசினார். அவ்வீரவேலும் விரைந்து சென்று வழியில் இருந்த ஏழு குன்றுகளைக் கொண்ட  தென் கைலாய பர்வத மலையை துளைத்துக்கொண்டு ஜவ்வாது மலைத் தொடரின் தென் பகுதியிலுள்ள செங்கம் மலையின் ஒரு பகுதியில்  குத்தி சொருகிக்கொண்டது. தற்சமயம் மேல்குப்பம் கிராமத்தின் மலைப் பகுதிதான் முருகவேளல்  துளைத்த புனித இடமாகும்.

அங்கிருந்து உண்டாகிய நீர்வீழ்ச்சி பகுதிதான் மேற்கு நோக்கி சென்று சேயாறாக ( குழந்தை உருவாக்கிய ஆறாக ) தென் கைலாய பர்வத மலையை ஒட்டி பெருகி வந்து வடக்கு ,வட   கிழக்கு நோக்கி சிறப்புமிகு உத்திரவாஹினி பிரவாகமாக ஓடி தொண்டைமண்டலத்தை நீர்வளம் மிகு பகுதியாக மேன்படுத்தி வருகிறது. குழந்தை  ஸ்ரீ முருகனால் உருவாக்கப்பட்டதால் 'சேய்' என்று அடைமொழி பெற்றுள்ளது.  மேலும் தெலுங்கில் சேய் என்றால் கை  என்ற பொருளில், பெரியநாயகி ஜெகன் மாதாவிற்கே நன்னீர் வேண்டிய சமயம் இந்நதி பிரவாகம் உதவிக்கரம் கொடுத்ததால் சேயாறு   என்ற திருநாமம் பூண்டுள்ளது. சங்க கால இலக்கியங்களில் குன்று வாழ் குமரனுக்கு சே யோன் என்ற பெயர் குறிப்பும் உள்ளது

இச்சேயாறு அன்னை காமாக்ஷி காமகோடி பீட புகழ் மிகு காஞ்சிபுரத்திற்கு தெற்கே ஓடும் வேகவதி, கம்பா, பாலாற்றுடன் சங்கமம் ஆகி கங்கை யமுனை போல் மேன்மை அடைந்து திருக்கழுங்குன்றம் வழியாக சதுரங்கப்பட்டினம் சென்று வங்கக்கடலில் சங்கமமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

bottom of page